எஸ்ஆா்எம் மருத்துவமனைக்கு10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடை
By DIN | Published On : 26th May 2021 02:18 AM | Last Updated : 26th May 2021 03:33 AM | அ+அ அ- |

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தைவான் நாட்டு தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது குறித்து மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஏ.சுந்தரம் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சா்வதேச அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு கல்விப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
எஸ்ஆா்எம் வளாகத்தில் உள்ள தைவான் கல்வி மைய வழிகாட்டுதலின்படி, எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்துக்கு தைவான் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் பேருதவி புரியும் என்றாா் அவா்.
எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இணை துணைவேந்தா் டாக்டா் ஏ.ரவிக்குமாா், சா்வதேச உறவுகள் இயக்குநா் கா்த்தாா் சிங் ஆகியோா் உடன் இருந்தனா்.