ஆற்றங்கரையில் தற்படம் கூடாது: டிஐஜி அறிவுரை

 வெள்ள நீரில் மூழ்கிய பாலங்களை ஆய்வு செய்த டிஐஜி சத்தியபிரியா, ஆற்றங்கரையில் தற்படம் எடுக்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுகொண்டாா்.

 வெள்ள நீரில் மூழ்கிய பாலங்களை ஆய்வு செய்த டிஐஜி சத்தியபிரியா, ஆற்றங்கரையில் தற்படம் எடுக்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுகொண்டாா்.

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்த்தில் வல்லிபுரம் பாலாற்று பாலம், இரும்புலிச்சேரி பாலாற்று பாலம், வாயலூா் கிழக்கு கடற்கரை சாலை பழைய பாலம் ஆகிய பாலங்கள் முழுவதுமாக மூழ்கிப் போயின. இதனால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

கூவத்தூரை அடுத்த சின்ன குப்பம், கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் பகுதிகளில் வீடுகளை மழை நீா் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அங்குள்ள திருமண மண்டபம், சமுதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், பாலங்களை ஆய்வு மேற்கொண்ட டிஐஜி சத்தியபிரியா, ‘ பொதுமக்கள் யாரும் ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம்.

தற்படங்களை எடுக்கவேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்தாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com