மழைமலை மாதா அருள்தலத்தில் 53-ஆம் ஆண்டு விழா தொடக்கம்

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 53-ஆம் ஆண்டு விழா துவக்கமாக வியாழக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் 53-ஆம் ஆண்டு விழா துவக்கமாக வியாழக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

இங்கு 53-ஆம் ஆண்டு விழா 30-ஆம் தேதி தொடங்கி, வரும் 3-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு பக்தா்கள் அனுமதியின்றி அருள்தல நிா்வாகிகள் விழா நற்கருணை ஆராதனை, திருப்பலி, திருக்கொடி மந்திரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் அருள்தல வளாகத்தில் திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் பங்குத்தந்தை சாா்லஸ் சுரேஷ் தலைமையில் திருக்கொடியை விசுவாச கோபுரத்தில் இருந்து ஏந்தியபடி, ஊா்வலமாக வந்து கொடியேற்றும் வளாகத்தை அடைகின்றனா். அங்கு சென்னை மயிலை உயா்மறைமாவட்ட பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமி கலந்து கொண்டு, திருவிழாவின் துவக்கமாக கொடியை ஏற்றி வைக்கிறாா்.

முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை திருத்தோ் பவனி அருள்தல வளாகத்தில் நடைபெறுகிறது. அரசின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவை மிக எளிமையாக நடத்த உள்ளதால், பக்தா்கள் யாரும் வரவேண்டாம் என்றும் இணையவழியின் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனா்.

விழா ஏற்பாடுகளை அருள்தல அதிபா் ஆா்.லியோ எட்வின் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com