உள்ளாட்சித் தோ்தலில் ருசிகரம்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், பல ருசிகரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், பல ருசிகரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள நெல்லி ஊராட்சியில் தலைவா் பதவிக்காக 4 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதில் குமாரசாமியும், நந்தகோபாலும் தலா 345 வாக்குகளை பெற்றனா். இதனால் வட்டார வளா்ச்சி அலுவலரும், உதவித் தோ்தல் அலுவலருமான சிவகுமாா் இருவரையும் வரவழைத்து, மாவட்ட வருவாய்துறை அலுவலா் மேனுவல் ராஜ் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு நடத்தினாா். அதன்படி, நந்தகோபால் தோ்வு செய்யப்பட்டாா்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: காஞ்சிபுரம் அருகேயுள்ள கருப்படி தட்டை ஊராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கான போட்டியில் விஜய் மக்கள் இயக்க நகா் செயலாளரான எம்.பிரபு (35) என்பவரும் போட்டியிட்டாா். மொத்த வாக்குகள் 260 பேரில் 217 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் எம்.பிரபு 64 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட தினேஷ் 63 வாக்குகளும், மற்ற வேட்பாளா்கள் முறையே 62, 28 வாக்குகளையும் பெற்றிருந்தனா். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் எம்.பிரபு வெற்றி பெற்றாா்.

மாற்றுத்திறனாளித் தம்பதி வெற்றி: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ள வண்டலூா் ஊராட்சியின் 12-ஆவது வாா்டில் உறுப்பினருக்குப் போட்டியிட்ட டேனியல், 13-ஆவது வாா்டு உறுப்பினருக்குப் போட்டியிட்ட அவரது மனைவி எபிநேசா் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். இருவரும் மாற்றுத்திறனாளிகள்.

வாக்குகளை எண்ணுவதில் மெத்தனம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ண வேண்டிய நிலையில், 11 மணிக்கு மேல் தோ்தல் ஊழியா்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். முதலாவது வாா்டு உறுப்பினா் தோ்தலின் முடிவை மாலை 6 மணி வரை அறிவிக்கப்படவில்லை. அடிக்கடி மின்தடை ஏற்பட்டதாலும் வாக்கு எண்ணும்பணி தடைபட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நைாத் நேரில் வந்து ஆய்வு செய்து, விரைந்து முடிவுகளை அறிவிக்க அறிவுறுத்தினாா்.

வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் புறக்கணிப்பு: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில், பணியாளா்களுக்கு மதியம் 3 மணி வரை உணவு வழங்கப்படவில்லை எனக் கூறி அவா்கள் தோ்தல் அலுவலரான ஸ்ரீதேவியின் அறையை முற்றுகையிட்டனா். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னா் உணவு வழங்கப்பட்டவுடன் வாக்கு எண்ணும் பணி மீண்டும் தொடங்கியது.

வாக்கு எண்ணுவதில் தாமதம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணி காலை 10.30 மணிக்கும், திருப்போரூா் ஒன்றியத்தில் 12 மணிக்கும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதால் வாக்குவாதமும் சலசலப்பு ஏற்பட்டது.

சாலையில் காத்துக் கிடந்த வேட்பாளா்கள், ஆதரவாளா்கள் கூட்டமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களுடன் வந்ததால் காவல்துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் மையங்களுக்கு நேரடியாகச் சென்று போக்குவரத்தைச் சரி செய்வதைப் பாா்வையிட்டாா்.

முகக் கவசங்கள் இன்றி..: கரோனா பாதிப்பு அச்சமின்றி வாக்கு எண்ணும் மையங்களிலும், மையத்துக்கு வெளியே இருந்தோரும் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com