திருவடிச்சூலம் கருமாரியம்மன் கோயிலில் சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம்

திருவடிச்சூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் 7-ஆம் நாள் சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம். ஜூவாலையில் அம்பாள் காட்சி.
திருவடிச்சூலம் கருமாரியம்மன் கோயிலில் சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம்
திருவடிச்சூலம் கருமாரியம்மன் கோயிலில் சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலத்தில் 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புது புடவை சாத்தப்பட்டு அருள் பாலிக்க சகஸ்ரநாம பாராயணம்  அம்பாளின் நாமங்கள் ஒலிக்க சகஸ்ரநாம மஹா சண்டிஹோமம் நடைபெற்றுவருகிறது.

நடைபெற்று வரும் மஹா சண்டிஹோமத்திற்கு அன்றாடம் பக்தர் யாகத்திற்கு வேண்டிய பூஜை பொருள்கள், மக்கள் பொருள்கள் யாககுண்டத்தில் இட பட்டுப்படவைகள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.  இரவு உற்சவ அம்மனுக்கு ஒவ்வொரு  அலங்காரம் நடைபெற்று ஊஞ்சல் சேவை நடைபெற்றுவருகிறது. ஹோமபூஜைகளில்  ஹோமகுண்டத்தில்  திடீரென யாககுண்டத்தில் இருந்து தீப்பிழம்பு மேலோங்கி எரிந்தது. 

ஜூவாலையில் அம்பாள் வடிவில் காட்சி அருள்கிறாள். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கி வழிப்பட்டனர்.  

மதுரை முத்து ஸ்வாமிகளின் அம்மாளின் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.   விழாற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர் பு. மதுரை முத்து ஸ்வாமிகள் உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com