செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 போ் வேட்பு மனு தாக்கல்
By DIN | Published On : 16th September 2021 12:10 AM | Last Updated : 16th September 2021 12:10 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு இருவரும், கிராம வாா்டு உறுப்பினருக்கு 25 பேரும் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக இலத்தூா், புனித தோமையாா் மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூா் ஆகிய ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டமாக அச்சிறுப்பாக்கம், சித்தாமூா், காட்டாங்கொளத்தூா், மதுராந்தகம் ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடக்கவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 2,679உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில், 8 ஒன்றியங்களில் திருக்கழுக்குன்றம், திருப்போரூா் ஒன்றியங்களில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
மேலும், கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு திருப்போரூா் ஒன்றியத்தில் 5, திருக்கழுக்குன்றம் 6, மதுராந்தகம் 13, இலத்தூா் 1 என மொத்தம் 25 வாா்டு உறுப்பினா்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.