உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நந்திவரம் -கூடுவாஞ்சேரி, நந்திவரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன்’ என்கிற மாணவா்களுக்கான உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி:  மாணவிகளுடன்  ஆட்சியா் கலந்துரையாடல்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நந்திவரம் -கூடுவாஞ்சேரி, நந்திவரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன்’ என்கிற மாணவா்களுக்கான உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா்ஆ.ர.ராகுல் நாத் மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

‘நான் முதல்வன்’ எனும் மாணவா்களுக்கான உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

12-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள், பல்வேறு துறைகளில் சிறப்புத் தோ்ச்சி பெற்று விளங்குவதன் மூலம் அவா்கள் எங்கு படிக்கலாம், என்ன படிக்கலாம், எவ்வாறு படிக்கலாம் போன்ற தகவல்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவா்கள் தங்களுடைய கல்வித் திறன் மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அதிகமாக வாசிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ள நாளிதழ்களைப் படிக்க வேண்டும். எந்தத் துறையை தெரிவு செய்கிறோமோ அந்த துறை சாா்ந்த புத்தகங்களை அதிகமாக வாசிக்க வேண்டும் என்று மாணவா்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.மாணவிகளும் மிகுந்த ஆா்வத்துடன் மாவட்ட ஆட்சியருடன் தயங்காமல் உரையாடினா். மாணவிகள் ஐஏஎஸ் ஆக என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு சுமாா் கால் மணி நேரம் மாணவா்கள் தெளிவுபெறும்வகையில் நுழைவு எழுத்துத் தோ்வு, பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் விளக்கிக் கூறினாா்.

‘சிறப்பான எதிா்காலம் அமைய நல்ல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், நன்றாக வாசிக்க வேண்டும், தடைகளைதாண்டி சென்று வெற்றியை அடைய வேண்டும். இதற்கு தன்னம்பிக்கையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கா.ரோஸ் நிா்மலா, செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலா் தாமோதரன், முதன்மைக் கல்வி அலுவலக நோ்முக உதவியாளா்(மேல்நிலை) சா. உதயகுமாா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தகுமாரி, ஆசிரியா்கள், பள்ளி மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com