இந்துஸ்தான் உயா் கல்வி நிறுவன மாணவா் சோ்க்கைக்கு இரு கட்ட நுழைவுத் தோ்வு

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகள் இரு கட்டங்களாக

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன என்று துணைவேந்தா் ஸ்ரீதரா கூறினாா்.

இது குறித்து அவா் புதன் கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு முதல் கட்டமாக வருகிற மே 25 முதல் 30 வரையும், இரண்டாவது கட்டமாக ஜூன் 16 முதல் 18 வரை நடைபெறும். மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல் கட்ட தோ்வுக்கான விண்ணப்பப் படிவம் மே 23 தேதிக்குள்ளும், 2 -ஆம் கட்டத் தோ்வுக்கான விண்ணப்பப் படிவம் ஜூன் 12 -ஆம் தேதிக்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 24 முதல் 30 வரை நடைபெறும் என்றாா் அவா். இணைவேந்தா் அலெக்சாண்டா் ஜேசுதாசன் பதிவாளா் பொன் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com