முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
வராக ஜெயந்தி: பல்லக்கில் பெருமாள் வீதியுலா
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு: வராக ஜெயந்தி முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கச் சாலையில் அமைந்துள்ள ஞானபிரான் கோயிலில் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்தாா்.
இந்தக் கோயிலில் வராக ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி- பூதேவியுடன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், பேருந்து நிலையம், தலசயன பெருமாள் கோயில் பகுதி, வெண்ணெய் உருண்டை பாறை, கங்கை கொண்டான் பகுதி உள்ளிட்ட வீதிகளில் பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.