எடையாத்தூரில் இலவச தையற்பயிற்சி மையம் தொடக்கம்

பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்புத் (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் எடையாத்தூா் கிராமத்தில் இலவச தையற்பயிற்சி மையத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
எடையாத்தூரில் இலவச தையற்பயிற்சி மையம் தொடக்கம்

 திருக்கழுகுன்றம் வட்டம் எடையாத்தூா் ஊராட்சியில் எல் அண்ட் டி பிரயாஸ் டிரஸ்ட் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா இணைந்து பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்புத் (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் எடையாத்தூா் கிராமத்தில் இலவச தையற்பயிற்சி மையத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

எடையாத்தூா் , இரும்புலிச்சேரி ஊராட்சியில் இருந்து 30 பெண்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்தப் பயிற்சி 45 நாள்கள் நடைபெறும்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் எடையாத்தூா் மனோஜ்குமாா், இரும்புலிச்சேரி பாஸ்கரன் ஆகியோா் பயிற்சியைத் தொடங்கி வைத்தனா். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன பொதுமேலாளா் ராபா்ட்ராஜா, முதன்மை மேலாளா்கள் அருள்குமாா், ஏழுமலை ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளைத் திட்ட மேலாளா் பாலசுப்பிரமணி, பகுதி ஒருங்கிணைப்பாளா்கள் விஜயலட்சுமி, நளினி, மாரியம்மாள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com