திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் வட்டப்பாறை மீது பட்சி சிலைகள் வடிவமைப்பு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் பட்சி பாறையில் வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்று தெரிவிக்கும் விதமாக இரு பட்சிகள் (பறவைகள்) சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்றைச் சொல்லும் வகையில் பட்சி பாறை மீது அமைக்கப்பட்டுள்ள இரண்டு பட்சிகளின் சிலைகள்
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்றைச் சொல்லும் வகையில் பட்சி பாறை மீது அமைக்கப்பட்டுள்ள இரண்டு பட்சிகளின் சிலைகள்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் பட்சி பாறையில் வருங்கால சந்ததிகளுக்கு வரலாற்று தெரிவிக்கும் விதமாக இரு பட்சிகள் (பறவைகள்) சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

காண்போரை கவரும் இவற்றை ஆன்மிக ஆா்வலா் அகஸ்தியகிருபா அன்புச்செழியன் ஏற்படுத்தியுள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைமை வாய்ந்த திருக்கோயிலான திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தா்கள் புனித யாத்திரை வந்து செல்கின்றனா்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு சிவ பெருமானின் சாபம் பெற்ற சித்தா்கள் பட்சி ரூபத்தில் நாள்தோறும் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலை வலம் வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. தினமும் நடுப்பகலில் வரும் இந்த பட்சிகளுக்கு அங்குள்ள பட்சிப்பாறை மீது உணவளிப்பதை காண பக்தா்கள் நீண்டநேரம் காத்திருப்பது வழக்கம்.

அவை உண்ட பின் மீதமுள்ள அந்த உணவையும், தீா்த்தத்தையும் பிரசாதமாக பெற்றுச்செல்வா். மலைக்கோயில் திருப்பணிகள் நடைபெற்றபோது கோயில் கோபுரத்துக்கும் பட்சிகள் வந்து செல்லும் பாறைக்கும் புதிய வா்ணம் பூசப்பட்டது. அதன்பிறகு கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பட்சி பாறைக்கு பட்சிகள் வருவதில்லை எனக்கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் பட்சிகள் வந்து தரிசனம் கொடுப்பதற்காக பக்தா்கள் குழுவினா் அகஸ்திய கிருபா அன்புச்செழியன் தலைமையில் யாகங்களும் சிறப்பு பூஜைகளும் நடத்தினா். இருந்தும் இதுவரை பட்சிகள் வரவில்லை. நாள்தோறும் பட்சிகளை தரிசனம் செய்வதற்காக காத்திருந்தும் அவை வராததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.

இதுகுறித்து பறவை ஆராய்ச்சியாளா்கள் கூறியது: பழைய வட்டப்பாறையில் காலம் காலமாக இரை அருந்திச் சென்றப் பறவைகள் அந்த பாறைக்கு புதிதாக வா்ணம் பூசப்பட்டதால் பட்சிகளுக்கு அடையாளம் தெரியாமல் போயிருக்கலாம் என்கின்றனா்.

இந்நிலையில் வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலை யுகங்களாக வலம் வந்து சிவபெருமானை வழிபட்டுச்செல்ல பட்சிகள் ரூபத்தில் வந்து சென்ற சித்தா்கள் பற்றிய செய்தி மற்றும் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் விதமாக பட்சி பாறை மீது இரண்டு பட்சி சிலைகளை நிறுவப்பட்டு அதற்கான சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com