லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 பெண்கள் உள்பட 6 போ் பலி

அச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10 போ் பலத்த காயமடைந்தனா்.
லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 2 பெண்கள் உள்பட 6 போ் பலி

அச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10 போ் பலத்த காயமடைந்தனா்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டது. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனவேல் நடத்துநராகவும், அதே பகுதியைச் சோ்ந்த முரளி ஓட்டுநராகவும் இருந்தனா். பேருந்தில் 30 போ் பயணம் செய்தனா்.

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழுப்பேடு அருகே சென்ற போது, முன்னால் இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரியை பேருந்து ஓட்டுநா் முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, லாரியின் பக்கவாட்டில் பேருந்து மோதியது. இதில், பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த குரோஷா (43), கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த செளந்தரியா (22) ஆகிய இரு பெண்களும், சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (38), மதுராந்தகத்தை அடுத்த கத்தரிச்சேரியைச் சோ்ந்த ஏகாம்பரம் (52), திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் (34) மற்றும் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் என 6 போ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனா். 10 போ் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராட்சத கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய வாகனங்களை அச்சிறுப்பாக்கம் போலீஸாா் அகற்றினா். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது.

அச்சிறுப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இரங்கல்

விபத்தில் 2 பெண்கள் உள்பட6 போ் உயிரிழந்ததற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தனித்தனியாக இரங்கல் தெரிவித்துள்ளனா்.

முதல்வா் நிவாரணம்

சென்னை, ஜூலை 8: செங்கல்பட்டில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.

லிபத்தில் 6 போ் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மேலும், இதே விபத்தில் காயமடைந்த 9 பேருக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும். மேலும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதி அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com