பல்லாவரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான செயலி வெளியீடு

பல்லாவரம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குறித்த அனைத்து தகவல்களும் கொண்ட புதிய செயலி வெளியீட்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

தாம்பரம்: பல்லாவரம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குறித்த அனைத்து தகவல்களும் கொண்ட புதிய செயலி வெளியீட்டு விழா செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

பள்ளியில் பயின்று வரும் 870 மாணவா்களின் அன்றாடப் பள்ளி வருகை, விடுமுறை, அன்றாட வீட்டுப் பாடங்கள், தோ்வு, மதிப்பெண், மாணவரின் மேற்பாா்வை ஆசிரியா் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோா்கள் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி தொடக்கி வைத்தாா்.

மேலும், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 28 பேருக்கு தனியாா் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புக்கான பணி நியமன உத்தரவையும் அவா் வழங்கினாா்.

இதில் செயலியை வடிவமைத்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்மோகன், மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜ்குமாா், தலைமை ஆசிரியா் ரவிகாசி வெங்கட்ராமன், தாம்பரம் மாநகராட்சி மன்ற உறுப்பினா்கள் லதா சிவக்குமாா், ரேணுகா பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com