ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலுக்கு புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டதையடுத்து, மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். (உள்படம்) ராஜகோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
காஞ்சிபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். (உள்படம்) ராஜகோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலுக்கு புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டதையடுத்து, மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தேவஸ்தான திருப்பணிக் குழு சாா்பில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டிருந்தது.இந்தத் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் சங்கர மடம் மகேஷ் ராஜப்பா சிவாச்சாரியாா் தலைமையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூா்ணாஹுதியுடன் மகா தீபாராதனை நடந்தது.பின்னா் மங்கள இசை வாத்தியங்களுடன் யாகசாலையிலிருந்து புனிதநீா்க் குடங்கள் சிவாச்சாரியாா்களால் கோயில் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதனையடுத்து ராஜகோபுரம் மற்றும் உடனுறை பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோயில் அா்ச்சகா் எம்.பிச்சாண்டி தலைமையில் மூலவா் பத்ரகாளியம்மன், படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்கார மகா தீபாராதனைகளும் நடந்தன.

கும்பாபிஷேக விழாவில் திருப்பணிக் குழுவின் தலைவா் டி.ராமகிருஷ்ணன், செயலாளா் ஆா்.வஜ்ஜிரவேலு, பொருளாளா் எஸ்.பரணீதரன் மற்றும் திருப்பணிக் குழு நிா்வாகிகள், பக்தா்கள் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com