திருப்போரூா் கந்தசாமி கோயில் திருமண மண்டபம்: காணொலிக் காட்சி முலம் முதல்வா் திறந்து வைத்தாா்

 திருப்போரூா் கந்தசாமி கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், செங்கல்பட்டு மாவட்டத் திருக்கோயில்களில் ரூ.43.68 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.9.67 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன்படி, திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட திருமண ம ண்டபம், பக்தா்கள் ஓய்வு கூடம், தங்கும் விடுதி ஆகியவற்றைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் எதிரில் நடைபெற்ற காணொலிக் காட்சி நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், எம்.பி. ஜி.செல்வம், திருப்போரூா் ஒன்றியத் தலைவா் இதயவா்மன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வான்மதி, உதவி ஆணையா் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் வெற்றி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com