செங்கல்பட்டில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க சார்பில் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க சார்பில் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் த.மு.செல்லப்பன் தலைமை தாங்கி உரையாற்றினார். மாநில பிரசார செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார். முன்னதாக மாநில அமைப்பு செயலாளர் பச்சையப்பா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட பொருளாளர் வாசுதேவன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். அகவிலைப்படி 1-1-22 முதல் 3% அகவிலைப்படியை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில்,  வாக்குறுதி அளித்தபடி 70 வயது நிரம்பிய அவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல், குடும்பப் பாதுகாப்பு நிதியாக ரூ.80 மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டபோது ஐம்பதினாயிரம் வழங்கப்பட்டது.

இப்போது மாதந்தோறும் ரூ 150 குடும்ப பாதுகாப்பு நிதி உயர்த்தி பிடித்தம் செய்யப்படுகிறது. பணியில் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறார்கள். ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு லட்சமாக உயர்த்தி தரவேண்டும். தற்போது அமலில் உள்ள காப்பீட்டு திட்டம் 30-6-2022 உடன் முடிவடைந்துவிட்டது. 1-7-2022 முதல் புதிய காப்பீட்டு திட்டம் அமலுக்கு வர ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு முழு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் வேண்டும் விலகிக்கொள்ள அனுமதி வேண்டும். 

இலவசப் பேருந்துகள் தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்கள் பேருந்துகளில் இலவசமாக அல்லது 50 சதவீத பயண சலுகை தர வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும் ,பேரூராட்சி ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், லட்சுமிபதி, நாராயணசாமி, ராமலிங்கம், பன்னீர்செல்வம், செங்கை நகர வளர்ச்சி மன்ற செயலாளர் வாசுதேவன், மணிவண்ணன், எஸ்.சுப்பிரமணியன், வரதையன், எஸ்.கிருஷ்ணன், செல்லப்பா, உள்ளிட்ட மதுராந்தகம், அச்சரப்பாக்கம் செய்யாறு, சூனாம்பேடு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளை பொறுப்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் எம். வரதையன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com