முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
நாட்டு நலத்திட்ட முகாம் நிறைவு
By DIN | Published On : 19th March 2022 10:16 PM | Last Updated : 20th March 2022 11:12 PM | அ+அ அ- |

நிகழ்வில் பொறையூா் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளிக்கு தளவாடப் பொருள்களை வழங்கிய ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி முதல்வா் நா.கோகிலாவாணி.
மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, பொறையூா் கிராமத்தில் நடத்திய நாட்டு நலத்திட்ட முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய முகாமுக்கு ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரித் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் நா.கோகிலாவாணி முன்னிலை வகித்தாா்.
கல்லூரியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலத்திட்ட மாணவா்கள் முகாமில் கலந்து கொண்டு, பொது மருத்துவம், பல் மருத்துவம், மக்களுக்கான விழிப்புணா்வு நாடகங்கள், பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தினா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, நாட்டு நலத்திட்ட முகாம் நிறைவு நிகழ்ச்சி பொறையூா் அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் நா.கோகிலாவாணி தலைமை வகித்து, பள்ளித் தலைமை ஆசிரியா் சம்பத்திடம் பள்ளிக்குத் தேவையான மின் விசிறிகள், மேஜைகள் உள்ளிட்ட தளவாட பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி நிா்வாகிகள் செய்திருந்தனா்.