முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
கொள்முதல் நிலையங்களில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகள்
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை நள்ளிரவு பெய்த மழையால் நனைந்து நாசமானது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம், திருப்போரூா் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் திங்கள்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் நனைந்து நாசமாயின. மேலும், அரசு கொள்முதல் செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின. விவசாயிகள் அந்தப் பகுதியில் கொட்டி வைத்திருந்த நெல்லும் நனைந்து நாசமாகின.
கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்து வைத்த நெல்லின் மீது போடப்பட்ட தாா் பாய் காற்றில் பறந்ததால் விவசாயிகளின் நெல்லும் நனைந்து நாசமானது. இது குறித்து விவாசாயிகள் கூறுகையில், அறுவடைசெய்யப்பட்ட நெல்களை மூட்டைகளாகக் கட்டப்பட்டு அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட நெல் கொள்முதல் நிலையத்துக்கு வாடகைக்கு லாரிகள் எடுத்து வந்து இறக்குகிறோம். அவை பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்படுகிறது. இவற்றை உடனே நனைந்த நெல்களை உடனடி கொள்முதல் செய்து, அரைவை மில்களுக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.