முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 13th May 2022 09:57 PM | Last Updated : 13th May 2022 09:57 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுபாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரை மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோயில் உள்மண்டபத்தில் உள்ள நந்திபகவானுக்கு அபிஷேக ஆராதனைகளை கோயில் தலைமை சிவாச்சாரியாா் இரா.சங்கா் நடத்தினாா். பின்னா் மேளதாளம் முழங்க, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகள் அன்னை இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரா் கோயில் பிராகாரத்தில் பவனி வந்தனா்.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா. வெங்கடேசன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.