முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை செங்கல்பட்டு
ஸ்ரீவேதகிரீஸ்வரா் திருக்கோயில் சித்திரைப் பெருவிழா: பஞ்சமூா்த்திகள் வீதியுலா
By DIN | Published On : 13th May 2022 09:57 PM | Last Updated : 13th May 2022 09:57 PM | அ+அ அ- |

திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் 9-ஆம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்சமூா்த்திகள் வீதியுலா.
திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தந்த தொட்டி, கிளி வாகனத்தில் உற்சவமூா்த்திகள் பவனி வந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் மலைக்கோயில், பக்தவத்சலேஸ்வரா் தாழக்கோயில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த மே 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தந்த தொட்டி கிளி வாகனம் பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு நடைபெற்றது . இதையொட்டி, முன்னதாக உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஸ்ரீவிநாயகா், முருகா், அம்மன், சண்டிகேஸ்வரா், வேதகிரீஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் வீதி யுலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறைஉதவி ஆணையா் லட்சுமி காந்தன் பாரதிதாசன், செயல் அலுவலா் மேகவண்ணன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.