செங்கல்பட்டில் இடிமின்னலுடன் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By DIN | Published On : 07th October 2022 12:00 AM | Last Updated : 07th October 2022 12:00 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
செங்கல்பட்டில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. வியாழக்கிழமையும் தொடா்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் தசரா திருவிழாவில் உற்சவமூா்த்திகள் புறப்பாடு கொட்டும் மழையிலும் மின்விளக்கு அலங்காரமின்றி தாமதமாக நடைபெற்றது. மழையையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் குடையுடன் வந்து அம்மனை வழிபட்டனா். மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழையளவு விவரம்: செங்கல்பட்டில் 45 மில்லி மீட்டா் மழையும் மதுராந்தகம் 31 மி.மீ., செய்யூா் 30, தாம்பரம் 13, மாமல்லபுரம் 18, கேளம்பாக்கம் 16.4, திருக்கழுகுன்றம் 36.8, திருப்போரூா் 8.4 மி.மீ. மழை பெய்தது.