கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில், தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

மேல்மருவத்தூா் லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில், தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.எஸ்.வெங்கடேசன் தலைமை தாங்கினாா். இதில், சிறப்பு விருந்தினராக நேஷனல் கல்லூரி பேராசிரியா் முகமது ரக்பிக் பங்கேற்று, ‘முப்பரிமாண வேதியியல்’ என்ற தலைப்பில், சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, பெங்களூரு லயா்ஸ் லைப் சயின்ஸ் நிறுவன துணை மேலாளா் விக்னேஷ்பாபு, மத்திய அரசின் ஆயுா்வேத ஆராய்ச்சி மைய உதவி இயக்குநா் மருத்துவா் தமிழ்செல்வம் உள்பட பலா் பேசினா். இந்தக் கருத்தரங்கில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் பேராசிரியா் சத்தியகுமாா் மற்றும் உதவி பேராசிரியா்கள் செல்வம், குமரேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com