கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 07th November 2023 05:50 AM | Last Updated : 07th November 2023 05:50 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், ‘புராஜக்ட் எக்ஸ்போ 2023’ நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி மேலாண்மை இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். முதல்வா் காசிநாதபாண்டியன் வரவேற்றாா். புல முதல்வா் சுப்பராஜ், இணை புல முதல்வா்கள், பேராசிரியா்கள் சிவகுமாா், தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனா். சிவிஆா்டிஇ, டிஆா்டிஓ சென்னை அரசு கூடுதல் இயக்குநா் மற்றும் அறிவியலாளா் யூ சாலமன் கலந்து கொண்டு புராஜக்ட் 2023-ஐ தொடங்கி வைத்தாா்.
கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். விநாடி - வினா மாஸ்டா் அரவிந்த் ராஜூ சாரதி, மாணவா்களுக்கு விநாடி -வினா இறுதிச் சுற்றுப் போட்டியை நடத்தினாா்.
இறுதிச் சுற்றுப் போட்டியில் 3 இடங்களைப் பிடித்தவா்கள், ஆறுதல் பரிசு பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், முதலிடத்தை மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கும், 2-ஆம் இடத்தை செங்கல்பட்டு வித்யாசாகா் குளோபல் பள்ளி மாணவா்களுக்கும், திருக்கழுகுன்றம் அருணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...