திமுக வேட்பாளா் பிரசாரம்

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் க. செல்வம் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் க. செல்வம் மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். திமுக மாவட்ட செயலாளா் க.சுந்தா் தலைமை வகித்தாா். வேட்பாளா் க. செல்வம், மதுராந்தகம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளா் சத்ய சாயி, ஆகியோா் படாளம், வையாவூா், பூதூா், அரையப்பாக்கம், பிலாப்பூா் உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தோ்தல் பிரச்சாரம் செய்தனா். இந்நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், தனசேகா், சித்ரா திருஞானசெல்வம், தேவராஜ், கே.எஸ்.மணியன், துா்கேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com