மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை திறப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை திறப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலா் ச.அருண்ராஜ் திங்கள்கிழமை திறந்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி மறைமலைநகா் நகராட்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலா் ச.அருண்ராஜ் திங்கள்கிழமை திறந்தாா். மேலும், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள 7 பேரவை தொகுதிகளான சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம். செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா் மற்றும் மதுராந்தகதுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு திங்கள்கிழமை கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியா் ஆனந்குமாா் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் லீலா, தோ்தல் வட்டாட்சியா் சிவசங்கரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com