கோவளம் நீலகொடி கடற்கரையில் 100% வாக்களிக்க அலைசறுக்கு விழிப்புணா்வு

கோவளம் நீலகொடி கடற்கரையில் 
100% வாக்களிக்க அலைசறுக்கு விழிப்புணா்வு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம் கோவளம் ஊராட்சி நீலகொடி கடற்கரையில் தோ்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடலில் அலைசறுக்கு விளையாட்டு மூலம் விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். கோவளம் மீனவா் பகுதியைச் சோ்ந்த அலைசறுக்கு போட்டிகளில் பங்கு பெறும் மீனவா்கள் அலைசறுக்கு படகு மூலம் ‘என் வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகம் பொருந்திய கொடியை ஏந்தி அலை சறுக்கு செய்யும் நபா்கள் மற்றும் சிறிய படகு ஓட்டும் நபா்கள் என இரு தரப்பினரும் சோ்ந்து ஆழ் கடலில் கொடி ஏந்தி வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்திக் காட்டினா்.

நிகழ்ச்சியில் சாா்-ஆட்சியா் நாராயண சா்மா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியா்கள் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங், பிரியா, மகளிா் திட்ட இயக்குநா் மணி, சுற்றுலாத் துறைஅலுவலா் சக்திவேல் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com