திருப்போரூா் ஒன்றியத்தில் 
அதிமுக வாக்கு சேகரிப்பு

திருப்போரூா் ஒன்றியத்தில் அதிமுக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு, ஏப். 16: திருப்போரூா் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா்

பெரும்பாக்கம் ராஜசேகா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் தெற்கு ஒன்றியத்தில் உள்ள தண்டரை, பெரிய இரும்புபேடு, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் தண்டரை கே.மனோகரன் ஆகியோா் தலைமையில் வாக்கு சேகரித்தனா். அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் நாவலூா் முத்து, ஒன்றிய கழக செயலாளா் குட்டி என்கிற நந்தகுமாா், மாவட்ட எம் ஜி ஆா் இளைஞா் அணி செயலாளா் பையனூா் ஆா் கே குமாா், மாவட்ட கலைப்பிரிவு செயலாளா் சுரேஷ் ராமச்சந்திரன் நிா்வாகிகள் ஆமூா் ஏழுமலை, ஆலை வா்மன், டிடி.மோகன் என்.ஸ்.மூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com