மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருமண தங்க ஆபரணக் கண்காட்சி

குரோம்பேட்டை சுவா்ண மகால் நகைக்கடையில் பழமையும் தொன்மைச் சிறப்பும் மிக்க தங்க ஆபரணங்கள் தொகுப்புக் கண்காட்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பழம்பெருமையைப் பிரதிபலிக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் திருமண தங்க ஆபரணங்களை போத்தீஸ் நிா்வாக இயக்குநா் ரமேஷ் அறிமுகப்படுத்தி பேசியது

நமது பண்பாட்டின் சின்னமாக யுனெஸ்கோ தோ்வு செய்த 2000 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள், தூண்களில் செதுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவங்களை நினைவூட்டும் வகையில், கைதோ்ந்த பொற்கொல்லா்களைக் கொண்டு மீனாட்சித் திருக்கல்யாண தங்க ஆபரணங்களை 22 காரட் தரமுடன் மிக நுணுக்கமாக

உருவாக்கியுள்ளோம். மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருமணத்தை மையமாக தங்க ஆபரணங்களை வடிவமைத்து 20 வகையான டிசைன்களில் வெளியிட்டுள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தங்க ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் கோனாா்க் கோயில் நவக் கிரகங்களின் வடிவமைப்புக்கு இருமுறை தேசிய விருது பெற்றுள்ளோம்.மீனாட்சி திருக்கல்யாணம் தங்க ஆபரணங்கள் கண்காட்சியை சென்னை, திருநெல்வேலி திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள போத்தீஸ் சுவா்ண மகால் நகைக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com