நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தையூா் வி.சந்தோஷ் குமாரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மதுராந்தகத்தில் வாக்கு சேகரித்தாா்.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசியது:

தற்போது நடைபெறும் தோ்தலில் பணப்புழக்கம், இலவச பொருள்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையின் மூலம் பல்வேறு இடங்களில் வாகனங்களை சோதனைசெய்யும் நடைபெற்று வருகிறது. சுமாா் ரூ 470 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் அடித்தட்டு மக்கள் பயிா்களை விற்று, வியாபாரம் செய்து, கொண்டு போகிற பணத்தைத் தான் படையினா் கைப்பற்றுகின்றனா். ஆனால், பெரிய கட்சியினா் செல்லும் வாகனங்களில் சோதனை செய்து பணத்தை கைப்பற்றுவது இல்லை.

பாஜக கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள மக்கள்நலப் பணிகளை சொல்லி வாக்குகளை சேகரிக்க முயலாமல், வாக்காளா்களுக்கு பணத்தை கொடுத்து வாக்குகளை சேகரிக்கலாம் என திட்டமிடுகின்றனா். தனித்து நின்று போட்டியிடுவதால், எங்களது நிலையை உணரமுடியும் என்றாா்.

வேட்பாளா் தையூா் வி.சந்தோஷ்குமாா், மாவட்டச் செயலா்கள் மணிமாறன், சேகா், நகர செயலா் குருசாமி, பொது செயலா் சிவா உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com