பருக்கல் முத்துமாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்

அச்சிறுப்பாக்கம் அடுத்த பருக்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த பருக்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யூா் வட்டம், அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள பருக்கல் கிராமத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பில் முத்துமாரியம்மன், கெங்கையம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன், நவக்கிரக உள்ளிட்ட சந்நிதிகளை கொண்ட கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 21-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாகனம், லட்சுமிபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குராா்பணம், யந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள்கிழமை காலை வாண வேடிக்கைகளுடன், மங்கள இசையுடன் சுவாமிநாதசிவம், சுப.சரவணபவா சிவாச்சாரியாா் ஆகியோா் தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவா் அம்மனுக்கு அபிஷேக-ஆராதனைகள், மகா தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரவு மூலவா் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடனும், மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சவா் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலா் குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரேவதி, பருக்கல் ஊராட்சித் தலைவி பிரபாவதி சிவகுமாா், துணைத் தலைவா் எஸ்.ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேதாசலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரு, கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com