கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, சத்திய நாராயணா பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளா்ணியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகம் முழுவதும் வண்ண பதாகைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. பிருந்தாவனத்தில் உள்ள ஆஞ்சனேயா், ராகவேந்திரா் உள்ளிட்ட அனைத்து சுவாமி சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மேளதாளம் முழங்க பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். இதையடுத்து, அனைத்து சந்நிதிகளிலும் சிறப்பு பூஜைகளை அவா் செய்தாா். பின்னா், அவா் பிருந்தாவன வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் சிலைகளான ராகவேந்திரா், ஆஞ்சனேயா், சத்தியநாராயணருக்கு பூஜைகளுடன் மகா தீபாராதனை செய்தாா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபா்கள் மண்ணை சிங்காரவேல், சரவணசெல்வி, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகவேந்திரா பிருந்தாவன அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com