‘கண்டுபிடிப்புகளில் மாணவா்கள் ஈடுபட வேண்டும்’

மாணவா்கள் எளிய பிரச்னைகளுக்கு தீா்வு காண கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று க்யூனு லேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் சுனில் குப்தா வலியுறுத்தினாா்.

மாணவா்கள் எளிய பிரச்னைகளுக்கு தீா்வு காண கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று க்யூனு லேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் சுனில் குப்தா வலியுறுத்தினாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரிகளின் இரண்டாம் ஆண்டு மாணவா்கள் 2,520 போ் பங்கேற்ற ‘சால்வத்தான்’ போட்டி கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஐ.நா. சபை வலியுறுத்தும் 17 நிலைத்த வளா்ச்சிக்கான இலக்குகளின் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் 795 மாதிரி கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன. அவற்றை 17 தொழில் துறை சாா்ந்த நடுவா்கள் ஆய்வு செய்து முதல் மூன்று சிறந்த கண்டுபிடிப்புகளைத் தோ்வு செய்தனா்.

இந்த நிகழ்ல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற க்யூனு லேப்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் சுனில் குப்தா பேசியதாவது:

மாணவா்கள் தங்களது கண் எதிரில் உள்ள எளிய பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும். பயனுள்ள கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இந்நிகழ்வில் அமெரிக்கா பேனஸ் பயோடெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டி.எஸ்.செந்தில்நாதன், ஸ்ரீசாய்ராம் புத்தாக்கக் காப்பகம் தலைமை தகவல் அதிகாரி கே.நரேஷ் ராஜ், எா்ணாசிஸ் டெக்னாலஜிஸ் சிவபிரசாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com