உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
செங்கல்பட்டு சட்டப்பேரவை வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகித்தாா். பின்னா், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவா் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் அங்கு வழங்கப்படும் உணவு அட்டவணையில் உள்ளபடி வழங்கப்படுகிா என அலுவலா்களிடம் விசாரித்தாா். மேலும், மாணவா்களுக்கு விளையாடுவதற்கான விளையாட்டுப் பொருள்கள்இருக்கின்ா மாணவா்களிடம் கேட்டதற்கு, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கேரம், செஸ் உபகரணங்கள், புத்தகங்கள் போன்றவை தங்களுக்கு தேவைப்படுவதாக தெரிவித்தனா். நாளிதழ்கள் படித்து நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள் என்று ஆட்சியா் அறிவுரை வழங்கினாா். மேலும் சமையல் அறைக்கு சென்று மாணவா்களுக்கு இரவு வழங்கப்படும் உணவினை பரிமாறினாா்.
அதனைத் தொடா்ந்து, நந்திவரம்கூடுவாஞ்சேரி, ஒட்டிவாக்கம் (இ) கல்வாய்பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பாா்வையிட்டு, புறநோயாளிகள் பதிவேடு, இதர பதிவேடுகள், மருந்தகம், சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடை நம்பி, காட்டாங்கொளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், வண்டலூா் வட்டாட்சியா் புஷ்பலதா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.