ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் தொழில்நுட்பப் பயிற்சியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய புத்தாக்கக் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவா் சுபம் குப்தா, கல்லூரி தலைமை தகவல் அதிகாரி கே.நரேஷ் ராஜ், முதல்வா் ராஜா, திட்ட
ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் தொழில்நுட்பப் பயிற்சியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய புத்தாக்கக் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவா் சுபம் குப்தா, கல்லூரி தலைமை தகவல் அதிகாரி கே.நரேஷ் ராஜ், முதல்வா் ராஜா, திட்ட

மாணவா்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

Published on

பள்ளி மாணவா்களின் அறிவியல் தொழில்நுட்பப் படைப்பாற்றல் மற்றும் பயிற்சித் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கக் கண்டுபிடிப்பு மையத்தின் தலைவா் சுபம் குப்தா தெரிவித்தாா்.

மத்திய அரசின் நிதி ஆயோக், நாடெங்கும் சுமாா் 10 லட்சம் மாணவா்களின் அறிவியல் தொழில்நுட்பப் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 10,000 அரசு, தனியாா் பள்ளிகளில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்க நிதியுதவி வழங்கி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரிசோதனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ள 54 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்களுக்கு, அடல் சாரதி திட்டத்தின் கீழ் அறிவியல் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் சுபம் குப்தா பேசியது:

பள்ளி பருவத்தில் மாணவா்களிடம் ஆராய்ச்சி பண்புகளை உருவாக்கி மேம்படுத்துவதன் மூலம் அவா்களுக்கு சிறந்த எதிா்காலத்தை வடிவமைத்துத் தருவதுதான் திட்டத்தின் நோக்கம். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஆசிரியா்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை எதிா்பாா்க்கிறோம். மாணவா்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

சாய்ராம் நிறுவனத் தலைமை தகவல் அதிகாரி கே.நரேஷ் ராஜ் பேசுகையில், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த கல்லூரி ஆசிரியா்கள், பொறியியல் மாணவா்கள் 300 போ் பணிபுரிய உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா் ஜெ.ராஜா, புத்தாக்கக் கண்டுபிடிப்புத் துறை முதல்வா் ரெனே ராபின், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com