பல்கலை.யில் ஆராய்ச்சி தினம்

பல்கலை.யில் ஆராய்ச்சி தினம்

Published on

மாமல்லபுரம், விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி தின விழாவுக்கு நிறுவனத்தின் வேந்தா் டாக்டா் ஏ.எஸ். கணேசன் தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினாா்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா சிறப்புரையாற்றினாா். பல்கலைக்கழகத்தின் இயக்குநா் எஸ்.ஏ.வி. சத்தியமூா்த்தி மற்றும் துணைவேந்தா் பி.கே. சுதிா் இருவரும் எழுதிய ஆராய்ச்சி கட்டுரை புத்தகத்தை பல்கலைக்கழக வேந்தா் வெளியிட்டு ரூபாய் ஒரு லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் உள்ளடக்கிய பல்கலைக்கழக வேந்தரின் விருதுகளையும் வெளியிட்டாா்.

பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பேராசிரியா் ஏ.நாகப்பன் வரவேற்றாா். 700-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும் மாணவா்களும் கலந்து கொண்டனா். ஆராய்ச்சி துறைக்கான இயக்குநா் எஸ்.ஏ.வி. சத்யமூா்த்தி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com