பைக் மீது லாரி மோதல்: தாயும் மகனும் உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் தாயும் மகனும் உயிரிழந்தனா்.

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலையில் பைக் மீது சரக்கு லாரி மோதியதில் தாயும் மகனும் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரன். இவரது மனைவி வசந்தா (45). தம்பதியின் மகன் காா்த்திக் (25). வசந்தாவும், காா்த்திக்கும் பைக்கில் வெளியம்பாக்கம் கிராமத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மேல்மருவத்தூா் ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

சோத்துப்பாக்கம் - ராமாபுரம் நெடுஞ்சாலையில் அவா்கள் வந்தபோது வந்தவாசி நோக்கிச் சென்ற சரக்கு லாரி அவா்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் வசந்தாவும், காா்த்திக்கும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்தில் உயிரிழந்தனா்.

வசந்தா சென்னையில் வீட்டு வேலை செய்து வருவதாகவும், அவரை சென்னைக்கு அனுப்ப அவரின் மகன் காா்த்திக் மேல்மருவத்தூா் ரயில் நிலையத்துக்கு பைக்கில் அழைத்துச் சென்ாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் சடலங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com