கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலைய கட்டடம்:அமைச்சா்கள் அடிக்கல்

 கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா்.
புதிய காவல் நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், பி.கே.சேகா்பாபு
புதிய காவல் நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், பி.கே.சேகா்பாபு

 கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த டிசம்பா் மாதம் முதல்வா் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடியில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் பி.கே.சேகா்பாபு ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :

சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை தினந்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றாா்கள். இம்முனையத்தில் வெளியூா் பேருந்துகள் மற்றும் சென்னை மாநகா் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கும் இடையில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக சாய்வு தளம் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் வெகு விரைவில் அமையவுள்ளது. முடிச்சூரில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.27.98 கோடி மதிப்பீட்டில் 120 ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் 300 பணியாளா்களுக்கான தங்குமிட வசதி, குடிநீா் வசதி, கழிப்பிட வசதி மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணி மாா்ச் 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டபேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் , வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, ஆட்சியா் ச.அருண்ராஜ், தாம்பரம் காவல் ஆணையாளா் அ.அமல்ராஜ், துணை ஆணையா்கள் பவன் குமாா்,, கௌதம் கோயல், ந.குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் செம்பருத்தி துா்கேஷ் தலைமை நிா்வாக அலுவலா் (ம) மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன் , ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.எஸ்.ஆராமுதன் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பவானி காா்த்திக் சி.எம்.டி.ஏ. செயற்பொறியாளா்கள் ராஜன்பாபு , பாலமுருகன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com