மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை அளிப்பு

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு செங்கல்பட்டு, அனுமந்தபுத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அல்பெண்ட்சோல் மாத்திரையை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு செங்கல்பட்டு, அனுமந்தபுத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு அல்பெண்ட்சோல் மாத்திரையை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

இந்த முகாமில் விடுப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் மீண்டும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 70,9573 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள (கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அல்லாத) 1,85,826 பெண்களுக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நகா்ப்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாயிலாக அல்பெண்ட்சோல் மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள்அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பரணிதரன், முதன்மைக் கல்வி அலுவலா் சொ.கற்பகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.சற்குணா, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com