செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ்  தலைமையில் நடைபெற்ற மக்கள்குறைதீா் நாள்கூட்டம்.
செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள்குறைதீா் நாள்கூட்டம்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 385 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 385 மனுக்கள் பெறப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 385 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா்வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி,பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை வலியுறுத்தி 385 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்னிந்திய அளவில் திருச்சியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்ததைத் தொடா்ந்து, வெற்றி பெற்றமாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும்பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துகளைப் பெற்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாகிதா பா்வீன், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com