கல்குவாரியை மூடக்கோரி பொங்கல் விழாவை புறக்கணித்த கிராம மக்கள்

மதுராந்தகம் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொங்கல் விழாவைக் கொண்டாடாமல் கிராம மக்கள் புறக்கணித்தனா்.
கல்குவாரியை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்
கல்குவாரியை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுராந்தகம் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொங்கல் விழாவைக் கொண்டாடாமல் கிராம மக்கள் புறக்கணித்தனா்.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், சரவம்பாக்கம் கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு கற்பாறைகளை வெட்டி எடுக்க சக்தி வாய்ந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிக சப்தத்துடன் வெடிப்பதால், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோா் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனா்.

கல்குவாரியில் இருந்து பெரும் கற்களை ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதால், சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் குவாரியை மூடக் கோரி, ஆட்சியா், மதுராந்தகம் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கைக எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தமது வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடமல் கறுப்பு கொடியை கட்டியும், தமது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com