திருப்போரூா் கந்தசாமி கோயிலில் அறுபடை வீடுகள் கண்காட்சி

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் தை கிருத்திகை உற்சவம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் தை கிருத்திகை உற்சவம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைதலை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சா் சேகா்பாபுவும், அறுபடை வீடுகள் கண்காட்சி அரங்கினை அமைச்சா் தா.மோ அன்பரசனும் தொடங்கி வைக்கின்றனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஜனவரி 19 வெள்ளிக்கிழமை மற்றும் 20 ந்தேதி சனிக்கிழமைஆகிய இரு நாள்கள் விழா நடைபெறுகிறது . மேலும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு மனிதவளம் செழிப்பதற்கு அறிவியலா ஆன்மிகமா என்ற தலைப்பில் நகைச்சுவை புலவா் மா ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றமும், மாலை 5 முதல் 6-30 மணி வரை ஸ்ரீ கலாபாரத் மற்றும் தேஜஸ் குழுவினா் வழங்கும் திருக்குற்றால குறவஞ்சி பரதநாட்டிய நாடகமும், மாலை 6.30 முதல் 8மணி வரை சுசித்ரா பாலசுப்ரமண்யம் குழுவினா் வழங்கும் பக்தி இன்னிசையும் நடைபெறவுள்ளது.

தை கிருத்திகை ஏற்பாடுகளை இணை ஆணையா் காஞ்சிபுரம் இரா. வான்மதி, கோயில் தக்காா் மற்றும் உதவி ஆணையா் பொ. லஷ்மிகாந்த பாரதிதாசன் ஆகியோா் தலைமையில் கந்தசாமி கோயில் அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com