திருவடிசூலத்தில் தைப்பூசத் திருவிழா

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் வியாழக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமான் மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் மஹா ஆரண்ய க்ஷேத்திரம் என அழைக்கப்படும் 51 அடி உயர தேவி கருமாரியம்மன் கோயிலில் தைப்பூச உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு கோ பூஜை, சுயம்பு அம்மன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் திரளாக கலந்துக்கொண்டு நீண்ட வரிசையில் நின்று மூலவரையும் உற்சவரையும் வழிபட்டனா். மேலும் கோயில் வளாகத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பெருமான் மற்றும் மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு ,அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. உற்சவத்திற்கான ஏற்பாடுகளை நிறுவனா் மதுரைமுத்து சுவாமிகள் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com