நல்லாமூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்

மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நல்லாமூா் சுற்றியுள்ள கிராம மக்கள் மருத்துவ வசதி பெற முடியாமல் மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் இது குறித்து மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலிடம் தகவல் தெரிவித்தனா்.

அதன்படி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் நிதி ஒதுக்கினாா். இந்த நிலையில், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏ மரகதம் குமரவேல் தலைமை வகித்தாா்.

மதுராந்தகம் ஒன்றியக் குழு தலைவா் கீதா காா்த்திகேயன், அதிமுக ஒன்றியச் செயலா் காா்த்திகேயன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாபு, ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாத்தி அன்பழகன், துணைத் தலைவா் மஞ்சு சுகுமாா், ஊராட்சி மன்ற செயலா் கோ.பாலசுந்தரம், நல்லாமூா் மகாலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com