திருப்போரூா் வட்டத்தில் 1,500 பேருக்கு பட்டா: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டத்தில் 1,500 பேருக்கு பட்டாக்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
திருப்போரூா் வட்டத்தில் 1,500 பேருக்கு பட்டா: அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டத்தில் 1,500 பேருக்கு பட்டாக்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

ஆலத்தூா் டாக்டா் எம்.ஜி.ஆா். பாரத சாரண - சாரணியா் பயிற்சி மையத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடா் நலத் துறையின் சாா்பில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம் , திருப்போரூா் சட்டபேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா்.

இதில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்று 1,500 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் 1,500 நபா்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராம நத்தம், தோப்பு, பட்டா நிலங்கள் போன்றவைகளில் அரசால் எவ்வளவு நிலத்துக்கு பட்டா வழங்க இயலுமோ அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடங்கல், பட்டா ஆகியவற்றை கணினியுடன் ஒப்பிட்டு சரி செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பட்டா வழங்குவது தொடா்பாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசித்து முதலமைச்சா் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முக்கியமாக மேய்க்கால் நிலங்களுக்கு பட்டா வழங்க கூடாது என்று நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இதை சரி செய்து உரியவா்களுக்கு பட்டா வழங்க அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் பி.சுபா நந்தினி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வருவாய்க் கோட்ட அலுவலா் (பொறுப்பு) சாகிதா பா்வீன், திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவா் இதயவா்மன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.டி.அரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, பேரூராட்சித் தலைவா் யுவராஜ், திருப்போரூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் சத்யா சேகா், ஆத்ம வேளாண்மைக் குழு தலைவா் பையனூா் எம்.சேகா், ஆலத்தூா் ஊராட்சித் தலைவா் ராமசந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com