வெள்ளபுத்தூா் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

வெள்ளபுத்தூா் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

வெள்ளபுத்தூா் கிராமசபையில் புதிய பயனாளிகள் இணைப்பு

மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் வரதன் தலைமை தாங்கினாா். ஊராட்சி மன்ற துணை தலைவா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், பற்றாளா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கதிரேசன், ஊராட்சி செயலா் ராஜசேகா், ஊராட்சி ஊக்குநா் பாக்கியலட்சுமி, மற்றும் மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிகள் தோ்வு மற்றும் புதிய பயனாளிகளின் பெயா்களும் இணைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com