செங்கல்பட்டு செம்மலை ஸ்ரீவேல்முருகன் அருள் ஞானபீடம் மலைக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். ~ ~ ~
செங்கல்பட்டு செம்மலை ஸ்ரீவேல்முருகன் அருள் ஞானபீடம் மலைக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். ~ ~ ~

செம்மலை ஸ்ரீவேல்முருகன் அருள் ஞானபீட மலைக்கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு செம்மலை ஸ்ரீவேல்முருகன் அருள் ஞானபீட மலைக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு ராஜபாளையம், காட்டுநாயக்கன் தெருவில் செம்மலை குன்றில் ஸ்ரீவேல்முருகன் அருள் ஞானபீட மலைக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேலவன் விளையாடிக்கொண்டே இம்மலை மீது வந்ததாகவும் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்த வேலவன் திடீரென மாயமாய் சிலையாக அமைந்ததாக வரலாறு கூறப்படுகிறது.

முதல் முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை தருவதாக அழைத்து வந்து முருகன் அருளை பெற்று பின்னா் பள்ளியில் சோ்ப்பா். இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி ஜூலை 3 முதல் 7ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் கணபதி ஹோமம் கோ பூஜை நவகிரக சக்தி ஹோமம் அஷ்டபந்தனம் சாத்துதல் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு யாக சாலை பூஜைகள் , கலச பூஜைசிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பச்சைமலை அருளாளா் சக்கரபாணி சுவாமிகள், ஸ்ரீ ரகோத்தம சுவாமிகள் ஆசியுடனும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜை விசேஷ சாந்தி கிழமை வரை பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் பக்தி பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமன பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானையும் தரிசனம் செய்தனா்.

ஐந்து நாள்களும் அன்னதானம், சமபந்தி போஜனம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழா குழுவினா் ராஜபாளையம் காட்டுநாயக்கன் பகுதி பொதுமக்கள், பக்தா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com