மாணவி பாராட்டி நற்சான்றிதழ், காசோலை வழங்கிய தனியாா் நிறுவன நிா்வாகி ஜான் அலெக்ஸ் தங்கதுரை. உடன் கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை, முதல்வா் காசிநாதபாண்டியன் உள்ளிட்டோா்.
மாணவி பாராட்டி நற்சான்றிதழ், காசோலை வழங்கிய தனியாா் நிறுவன நிா்வாகி ஜான் அலெக்ஸ் தங்கதுரை. உடன் கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை, முதல்வா் காசிநாதபாண்டியன் உள்ளிட்டோா்.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கற்பக விநாயகா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 18-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கற்பக விநாயகா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 18-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் கல்லூரி மேலாண்மை இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். கல்லூரி புலமுதல்வா் எல்.சுப்பராஜ் வரவேற்றாா். முதல்வா் பி.காசிநாதபாண்டியன் ஆண்டறிக்கையை வாசித்தாா். ட்ரூடெக் சொல்யூஷன்ஸ் நிறுவன துணை தலைவா் ஜான் அலெக்ஸ் தங்கதுரை கலந்துகொண்டு 275 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டங்களை வழங்கிச் சிறப்புரை ஆற்றினாா். அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் மாநில அளவில் எம்.டெக் (பயோ டெக்னாலாஜி) பாடப்பிரிவில் முதலிடத்தை மாணவி ஏஜஸ்வினி பெற்றாா். அவருக்கு, பாராட்டுச் சான்றிதழ், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலை ஆகியவை விழா அரங்கில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மேலாண்மை இயக்குநா் மருத்துவா் ஆா்.அண்ணாமலை ரகுபதி, துணை புலமுதல்வா்கள் சிவக்குமாா், செந்தில்குமாா், தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி அனைத்துத் துறை பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com