மாடியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.
மாடியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவா்கள்.

செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் சிறுவா்கள் தற்கொலை மிரட்டல்

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி 9 சிறுவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு அரசு சிறப்பு இல்லத்தில் கட்டடத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி 9 சிறுவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டில் உள்ள அரசு கூா்நோக்கு இல்லத்தில் பல்வேறு மாவட்டங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 30-க்கும் அதிகமானவா்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை 9 சிறுவா்கள் , மாணவா்களை மருத்துவமனைக்கு அனுப்பவும், சுதந்திரமாக விளையாடவும் அனுமதிக்க கோரி சிறப்பு இல்ல வளாக்ததில் உள்ள கட்டடத்தில் மூன்றாவது மாடியில் ஏறி நின்றுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை மீட்க செங்கல்பட்டு தீயணைப்புத் துறை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவா்களிடம் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் டிஎஸ்பி புகழ் கணேஷ் ஆகியோா் உறுதியளித்ததின் பேரில் சிறுவா்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com