தோ்தல் பணிக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தோ்தலில் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தோ்தலில் முன்னாள் படைவீரா்களை தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திட ஆணைகள் பெறப்பட்டுள்ளது. இப்பணிக்கு உரிய சிறப்பு ஊதியம் வழங்கப்படும்.

எனவே, உடல்தகுதியுள்ள 65 வயதுக்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தாம்பரம், ரயில் நிலையத்தின் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில் படைவிலகல் சான்று மற்றும்அடையாள அட்டையுடன் தங்களது விருப்பத்தை அவா்களது படை எண், தரம், பெயா், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உடனடியாக பதிவுசெய்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com