பைக் மீது காா் மோதல்: பேராசிரியா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: பேராசிரியா் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

திருப்போரூா் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

மேல்மலையனூரை சோ்ந்தவா் எம்.ஸ்ரீராம் (40). (படம். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா் சென்னை சேலையூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். கல்லூரியில் வேலைப் பாா்ப்பதால் திருப்போரூா் அருகே தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திருப்போரூரை அடுத்த செம்பாக்கம் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே எம்.ஸ்ரீராம் உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்போரூா் போலீஸாா் வந்து விபத்தில் உயிரிழந்தவா் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை உடற்கூறு ஆய்வுக்குப் பின் கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் ஸ்ரீராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா், குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரான மேல்மலையனூரில் அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com